சென்னையில் கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்த கோயம்பேடு சந்தையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் அதிக அளவில் தொற்று பரவிய இடங்களில் ஐ.சி.எம்.ஆரைச் சேர்ந்தவர்கள் குழுக்களாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக 5 பேர் கொண்ட குழுவினர் கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.காய்கறி சந்தை, பழச்சந்தை மற்றும் பூ சந்தையில் ஒவ்வொரு கடையாகவும், ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட இடங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
தொற்று பரவலுக்கான காரணம் குறித்து விரைவில் அறிக்கை அளிக்கவுள்ள அவர்கள், சந்தையை திறக்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.