சென்னையில் கொரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்தும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.
சென்னையிலுள்ள 200 வார்டுகளில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள 33 வார்டுகளில் பரிசோதனைகளை பரவலாக்கும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் நடமாடும் எக்ஸ் ரே வாகனம் மற்றும் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடனுக்குடன் முதற்கட்ட சோதனை செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் முகக்கவசம், Zinc vitamin மாத்திரைகள், கபசுர குடிநீர் ஆகியவை மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.நிகழ்ச்சியின் போது எம் ஆட்டோ நிறுவனம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட 2 கிருமி நாசினி தெளிக்கும் ரோபோக்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்பட்டன.