திருமழிசையில் 3வது நாளாக இயங்கி வரும் காய்கறிசந்தையில் இன்று ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறிகள் சந்தை, திருமழிசை துணைக்கோள் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
இன்றைய தினம் சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் 3ஆயிரத்து 500 டன் காய்கறிகள் சந்தைக்கு வந்தன. திருமழிசையில் காய்கறிகள் சந்தை வந்த பின்பு தக்காளி, வெங்காயம், கத்தரி, வெண்டை, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவற்றின் விலை குறைந்தாலும் வரத்து குறைவால் பீன்ஸ் கிலோ ஒன்றிற்கு 90 ரூபாய் வரை விற்கப்பட்டது.
அதேபோல் கொத்தமல்லி ஏற்றுமதியாகும் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதால் வரத்து குறைந்து 40 கட்டு 1000 ரூபாய் வரை விற்க்கப்ட்டது.