கோயம்பேடு சிறு வியாபாரிகளுக்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் விரும்பிய இடங்களை ஒதுக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் கொரோனா பரவலை அடுத்து அங்கிருந்த 1500க்கும் மேற்பட்ட சிறு மொத்த வியாபாரிகளில் 300க்கு மேற்பட்டோருக்கு திருமழிசையில் தற்காலிகக் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாதவரத்திலும் கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை ஏற்க மறுத்து கோயம்பேடு சுற்றுவட்டாரங்களில் கடைகள் கோரிய பலர், இன்று தங்களுக்கு கடைகள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறு வியாபாரிகள் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மைதானங்கள், காலி இடங்கள் உள்ளிட்ட மாநகராட்சி இடங்களை தேர்வு செய்து கோயம்பேடு அங்காடி நிர்வாகத்துக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.