கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ள காய்கறிச் சந்தை இன்று நள்ளிரவு முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிகச் சந்தை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சந்தையை ஆய்வு செய்தனர்.
இங்கு மொத்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் கடைகளுக்கான பாஸ்களைப் பெற்றுக்கொண்டு மொத்த வியாபாரிகள் இன்று இரவு 7 மணிக்கு சந்தைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு முதல் காய்கறிகள் இறக்கப்பட்டு நள்ளிரவுக்குப் பின் சந்தை செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.