சென்னையில் கொரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 796 பேர் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகளில் தற்காலிகமாக சிகிச்சை மற்றும் தனிமைபடுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 164 பேர் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கும், 216 பேர் வேலம்மாள் பொறியியல் கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ராஜூவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 382 பேர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்திற்கும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 96 பேர் லயோலா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.