சென்னை அண்ணா சாலையிலுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நடிகர் ரஜினி கொடுத்த நிவாரண உதவியை பெறுவது தொடர்பாக தயாரிப்பாளர் கே. ராஜனிடம் இன்னொரு தயாரிப்பாளர் பழனிவேல் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அளித்த அரிசி உள்ளிட்ட பொருள்கள், தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பழனிவேல் என்பவர், தயாரிப்பாளர்கள் அனைவரும் முதலாளிகள் என்றும், அப்படியிருக்கையில் ரஜினியின் பெயரில் தயாரிப்பாளர்களை அரிசி கொடுத்து ராஜன் அவமதிப்பதாக வாக்குவாதம் செய்தார்.
இதையடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஆடியோ பதிவில், ரஜினியின் பெயரை பயன்படுத்தி, அரிசி கொடுத்து தயாரிப்பாளர்கள் மீது கே.ராஜன் காறி உமிழ்ந்து விட்டதாக பழனிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.