சென்னை கோயம்பேட்டில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பகுதியில் 170 பேர் நேற்று வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அங்கு மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 36 பேரில், 3 பேர் அரியலூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஆவார். கோயம்பேட்டில் தொழிலாளிகளாக பணியாற்றிய நிலையில் அங்கேயே தங்கியிருந்த நிலையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயம்பேடு பகுதியில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 206ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் திருவான்மியூரில் கோயம்பேடு வியாபாரிகள் மூலம் மேலும் 14 பேருக்கு நோய் உறுதியாகியிருப்பதால் பாதிப்பு 29ஆக உயர்ந்துள்ளது.