சென்னை சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து வாகன ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மூலம் ரோந்து வாகனத்தில் பயணித்த காவல் உதவி ஆய்வாளருக்கும் தொற்று பரவியுள்ளது.
அதே போல் கோயம்பேடு சந்தையிலிருந்து தினமும் காய்கறி வாங்கி வந்து காவலர் குடியிருப்புகளில் விநியோகித்த புதுப்பேட்டை காவலர் அங்காடி தலைமை காவலருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் நாள்தோறும் காய்கறி கொள்முதல் செய்யப்பட்டு காவலர் குடியிருப்புகளுக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த பணியில் ஈடுபட்ட காவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.