சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு மே 17 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்காக, சென்னையில் அம்மா உணவகங்களில் மே 3ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
ஊரடங்கு 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அம்மா உணவகங்களில் உணவுக்கு கட்டணம் பெறப்பட்டது. இதையடுத்து 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படுவது மே 17 வரை நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
உணவுக்கான கட்டணத்தை தன்னார்வலர்கள் பலரும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து மீண்டும் விலையில்லாமல் உணவு வழங்கப்படுகிறது.