ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தி, தேவை இல்லாமல் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் சில தளர்வுகள் அமலுக்கு வரும் சூழலில், சென்னை மாநகரில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாகனங்களில் தேவை இல்லாமல் வெளியே வருபவர்களை தீவிரமாக கண் காணித்து நடவடிக்கை எடுப்பதுடன்,பொது மக்கள், வெளியே வரும் போது, கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யுமாறு, காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.