தமிழக அரசு பெயரில் போலி ஸ்டிக்கர் ஒட்டிய வேனில் சென்னையிலிருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு 11 பேரை அழைத்துச் சென்ற ஓட்டுநர் மீதும் வேனின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நத்தம்பட்டி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசார் அவ்வழியாக வந்த ஃபோர்ஸ் சுற்றுலா வேன் ஒன்றை மடக்கினர்.
“தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கலைப்பயணம்” என 4 புறமும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த வேனின் ஓட்டுநர் பாபு என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
விசாரணையில் சென்னையைச் சேர்ந்த மெல்வின் என்பவருக்குச் சொந்தமான அந்த வேனில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி பயணிகளை அழைத்து வந்தது தெரியவந்தது. மெல்வின், பாபு மற்றும் பயணிகள் 11 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அனைவரையும் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.