கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து, வீட்டிற்கு செல்லாமல் விடுதி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த மருத்துவ மாணவி மர்மமான உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா மருத்துவப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவ இறுதியாண்டு மாணவர்கள் வீட்டுக்கு செல்லாமல் விடுதியில் தங்கி பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி பிரதீபா, மாணவியர் விடுதியில் தங்கியவாறே கொரோனா வார்டில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் இன்று தனது அறையில் அசைவின்றிக் கிடந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப்பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் மரணத்திற்கு காரணம் தெரிய வரும்.