சென்னையில் 1930ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமையான யானை கவுனி பாலம் நவீன தொழில் நுட்ப உதவியுடன் இடிக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே துறைக்கு சொந்தமான இந்தப் பாலம் மிகவும் பழுதடைந்ததால் கடந்த 2016ம் ஆண்டு மூடப்பட்டது.
பாலத்தின் கீழ் எக்ஸ்பிரஸ், மின்சார ரயில்கள் சென்று வருவதாலும், 230 கிலோ வாட் மின்சார கம்பிவடம் செல்வதாலும் அதனை இடித்து அகற்ற ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கும் சூழலில் பாலத்தை இடிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி பாலத்தை இடித்து அகற்றும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
டைமன்ட் கட்டிங் கருவி மூலம் வெட்டி ராட்சத கிரேன் மூலம் அகற்றப்படுவதால், கீழே செல்லும் மின் தடங்களுக்கோ, தண்டவாளத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.