சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால், கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 10 நாட்களில் இரட்டிப்பாகி 168 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் வீடு, தெரு அமைந்துள்ள பகுதிகளை சென்னை மாநகராட்சி முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 17ஆம் தேதி 84 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. இந்த எண்ணிக்கை 10 நாட்களில் 168 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 46 இடங்களும், திரு.வி.க நகரில் 28 இடங்களும், தேனாம்பேட்டையில் 26 இடங்களும், தண்டையார்பேட்டையில் 22 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
கோடம்பாக்கத்தில் 9 இடங்களும், திருவொற்றியூரில் 8 இடங்களும், வளசரவாக்கத்தில் 7 இடங்களும், பெருங்குடியில் 6 இடங்களும், அண்ணாநகரில் 4 இடங்களும், மாதவரம் மற்றும் அடையாறில் தலா 3 இடங்களும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் தலா 2 இடங்களும், அம்பத்தூர் மற்றும் மணலியில் தலா ஒரு இடமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.