ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.