சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊரடங்குக் காலம் வரை வழக்கு விசாரணைகள் காணொலிக் காட்சி மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய, அவசர வழக்குகள் மட்டும் காணொலியில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சில நீதிபதிகள் அமர்வுகள் மட்டும் நேரடியாக வழக்குகளை விசாரித்தன.
இதனிடையே உயர்நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, ஊரடங்கு முடிவடையும் வரை வழக்குகள், நீதிமன்ற நடவடிக்கைகள் காணொலியில் மட்டுமே நடைபெறும் என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தப் பணிகளும் நீதிமன்ற அறைகளில் நடைபெறாது என்றும் நீதிமன்ற அறைகள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.