சென்னை மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 6 ஆயிரம் ராபிட் கிட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ள பாரதி கலைக்கல்லூரி வளாகத்தில் ராபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளோம் என்றும், நேரடியாக மக்கள் தொடர்பில் உள்ள காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள்,பத்திரிக்கையாளர்களுக்கு ராபிட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ராபிட் கிட் மூலம் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்றும், தொற்று இல்லையெனில் குறுஞ்செய்தி வராது என்றும் தெரிவித்தார்.