கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த 30 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து குணமடைந்த மேலும் 21 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வீடு திரும்பியவர்கள் மேலும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த தம்பதியரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 15 நாட்களாக செவிலியர்களின் பராமரிப்பில் இருந்த அவர்களது இரு குழந்தைகளும் இன்று தாய் தந்தையுடன் இணைந்தனர்.