சென்னையில் கொரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் என சென்னை மாநகராட்சி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
.இங்கு இதுவரை 214 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 20 பேர் குணமடைந்துள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
183 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாலின வாரியாக பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 69.05%, பெண்கள் 30.95%. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 64 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் குணமடைந்துள்ளார். இதற்கடுத்தபடியாக, திரு.வி.க. நகர் மண்டலத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.