ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் வழியின்றி தவித்த நிலையில், போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு வழி ஏற்படுத்தி கொடுத்தனார்.
மேலும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாஸ் உடன் வந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பாஸ் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் கூறியதால் வேறு வழியின்றி போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாஸ்க் அணியாமல் வந்தவர்களையும் எச்சரித்து அனுப்பிய போலீசார், தேவையின்றி வெளியே வந்த ஒரு சில வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.