சென்னை கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறி, பழங்கள் விற்பனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அவற்றிற்றான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேலும், சுவ்கி உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்கள் மூலம், விநியோகிக்கப்படும், காய்கறி, பழங்கள் தொகுப்புக்கான விலைப்பட்டியலையும், கோயம்பேடு சந்தை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயம்பேடு காய்கனி சந்தையில், கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு நேரடியாக, காய்கறிகள், பழங்கள் விற்பனையை, தமிழ்நாடு அரசின் சார்பில், சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் உள்ள கேயம்பேடு சந்தை நிர்வாகம், கடந்த புதன்கிழமை தொடங்கியது.
சுமார் 100 வாகனங்கள் மூலம் நடைபெறும் இந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவை, கோயம்பேடு சந்தையின் மொத்த விற்பனை விலைக்கே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.