தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் முக்கியஆலோசனை நடத்தியுள்ளனர்.
சென்னை - டி.எம். எஸ் வளாகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி, ரகுநந்தன்பங்கேற்று, கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், என்னென்ன அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் வைரஸ் தொற்று பரவியுள்ளதால், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பணியாற்றுமாறு, வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனையில், தமிழகம் முழுவதும் இயங்கும் 35 அரசு மருத்துவமனைகளின் டீன்கள், ஆர்.எம்.ஓக்கள் மற்றும் கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர் கள் கலந்து கொண்டனர்.