சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைப் ஸ்டைல் கடையில் பணியாற்றிய இளம்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், அந்த கடை மற்றும் வணிக வளாகத்திற்கு வந்து சென்ற 500 பேரின் தகவல் திரட்டப்பட்டு,
அவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு தொடர்வதாக, சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர், அதற்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு,
உயர் புரத சத்துகள், தாதுச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுவதாகவும், சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியுள்ளார்.