சென்னை கோயம்பேடு சந்தைக்கு பழங்களின் வரத்து குறைத்துள்ளதால் ஆப்பிள், மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 140 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ ஆப்பிள், தற்போது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 150 ரூபாய்க்கு விற்பனையான மாதுளை 200 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்பனையான பச்சை திராட்சை 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே சமயம் காய்கறிகளின் வரத்து சீராக உள்ளதால், கடந்த வாரம் விற்பனையான அதே விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.