சென்னை திருவல்லிகேணி ஜாம்பஜார் சந்தைப் பகுதியில் உள்ள கடைகளை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவை பொருட்படுத்தாமலும், கொரோனா விழிப்புணர்வு இல்லாமலும் அங்குள்ள கடைகளுக்கு பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வந்தபடி இருந்தனர்.
சமுக விலகலை கடைபிடிக்காமல் கடைகளில் இன்றும் கூட்டம் அதிகம் இருந்ததை கண்ட துணை ஆணையர் தர்மராஜன், பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அக்கடைகளை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்துக்கு நாளை முதல் மாற்ற முடிவு செய்யப்பட்டு, கடைக்காரர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வருகிறது.