சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 பேரின் வீடுகளைச் சுற்றியுள்ள சுமார் 2500 வீடுகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 15 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமை வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன் அவர்கள் தங்கள் வீட்டு சுற்றுவட்டாரங்களில் பலருடன் சமூகத் தொடர்பில் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை கருதி 15 பேரின் வீடுகளைச் சுற்றியுள்ள சுமார் 2500 வீடுகள் அடுத்த 28 நாட்களுக்கு கண்காணிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
2500 வீடுகளுக்கும் தினமும் செல்லவுள்ள அதிகாரிகள் அங்குள்ளவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள், உடல் நலப் பாதிப்புகள் உள்ளதா என பரிசோதனை செய்யவுள்ளனர்.