சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையை முதல்வர் நேரில் ஆய்வு செய்கிறார்...
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வார்டுகளை முதலமைச்சர் இன்று மாலை 5 மணிக்கு நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
இதையடுத்து டிஎம்எஸ் (DMS) வளாக பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு, சுகாதார துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
முன்னதாக, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.