சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை நாளை முதல் 2 நாட்களுக்கு செயல்படாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் மக்கள் கூடும் கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும் ஊரடங்கு உத்தரவையொட்டியும் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை விடப்படும் என்று கோயம்பேடு காய்கறி சந்தை கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் காய்கறி முதன்மையானது என்பதால் வியாபாரிகளுடன் அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி, கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சுகாதாரம் குறித்த வியாபாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து 2 நாள் விடுமுறை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.