கொரோனாவுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டத்திற்கு இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் ஆகியவையும் உறுதுணையாக செயல்பட்டு வருகின்றன.
மலேசியாவில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தாம்பரத்திலுள்ள விமானப்படை முகாமில் தனிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில்,
அங்கு மேலும் பலரை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆவடியிலுள்ள ராணுவத்தினருக்கான சீருடை உற்பத்தி ஆலையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை அங்கு 1 லட்சம் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் தங்கள் மருத்துவப் பணியாளர்களும் உதவ தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே போல் ஈரோட்டிலுள்ள தென்னக ரயில்வேக்கு சொந்தமான, லோக்கோ தொழிலகம் சானிடைசர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.