வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு சில காய்றிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
காலை 5 மணியுடன் சுய ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்த நிலையில், கோயம்பேடு வணிக வளாகம் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறி ஏற்றி வரும் லாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது.
வழக்கமாக, 120 லாரிகளில் காய்கறிகள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது 60 லாரிகளில் மட்டுமே கொண்டுவரப்படுகின்றன.
இந்த விலையேற்றத்தின்படி, கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ், அவரைக்காய் ஆகியவை 100 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, 25 ரூபாயாக இருந்த ஒரு கிலோ தக்காளி விலை 40 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.