சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அதிகமாகக் கூடுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சென்னையைப் பொறுத்த மட்டில் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் 5 மடங்காக உயர்த்தப்பட்டு 50 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு வரும் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.