தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொரோனா குறித்த எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சென்னையில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மருத்துவ முகாமோ அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கோயம்பேடு நிலையத்திலேயே படுத்து உறங்கி வருகின்றனர். அவர்களுக்கு கோரான வைரஸ் அறிவுரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என புகார் தெரிவித்துள்ள பயணிகள் குறைந்தபட்சம் மருத்துவ முகாமாவது நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.