வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர், பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர் பெயருடன் பெற்றோர் பெயரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து வழங்கப்படும் எனவும், எளிய உரை வடிவில் திருக்குறள் அச்சிடப்பட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, சிறைவாசிகளுக்கு மூன்றாம் வகுப்பிற்கு நிகரான சமநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற முக்கிய திட்டங்களையும் குறிப்பிட்டு பேசினார்.