உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
முன்னதாக இது தொடர்பான விசாரணையில் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில், 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே இவ்வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.