சென்னை பேசின் பாலத்தில் இருசக்கரவாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் தடுப்பில் மோதி தூக்கிவீசப்பட்டு ஒருவர் பலியான விபத்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு புளியந்தோப்பு பகுதியில் இருந்து இரு சக்கரவாகனத்தில் இரு இளைஞர்கள் பேசின் பாலத்தில் அதிவேகத்தில் சென்றுள்ளனர். அப்போது நிலைதடுமறி பாலத்தின் இடது ஓரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோதி தூக்கிவீசப்பட்டனர்.
பாலத்தின் கீழே செல்லும் ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்ததில் ராஜமங்கலத்தைச்சேர்ந்த லிவிங்ஸ்டன் டேனியல் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரெயில்வே போலீசார் விசாரணையில் அதிவேகத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன் இருவரும் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.