சென்னை வந்த அமெரிக்க வாழ் 15 வயது இந்திய சிறுவன் காய்ச்சல் காரணமாக, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கே.கே.நகரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, அமெரிக்காவில் இருந்து வந்த குடும்பத்தினருக்கு சென்னை விமான நிலையத்தில் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 15 சிறுவனுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்ததையடுத்து அதிகாலை 1 மணி தொடங்கி 3 மணிநேரம் நடந்த பல்வேறு பரிசோதனைக்கு பின்பு 4 மணிக்கு சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கும் மூன்று மணி நேரம் உடல் வெப்பம் உள்ளிட்ட பரிசோதனை நடத்தப்பட்டு சிறப்பு வார்டில் மருத்துவக்குழுவின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான். சிறுவனின் ரத்தமாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.