நாட்டு வெடிகுண்டு வீச்சு தொடர்பாக, பிரபல தாதா சி.டி.மணி, ஆன்லைனில் புகாரளித்துள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி சி.டி மணியும், ரவுடி காக்கா தோப்பு பாலாஜியும், தேனாம்பேட்டை அருகே காரில் வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கொலை செய்ய முயற்சித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக வெடிகுண்டு வீசியதாக கூறி மதுரை நீதிமன்றத்தில் நான்கு பேரும் தென்காசி நீதிமன்றத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர். சிடி மணியின் தரப்பில் அவரது வழக்கறிஞர் தங்கராஜ் வெள்ளிக்கிழமை நேரிடையாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து சி.டி.மணி ஆன்லைன் மூலம் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.