தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே நடந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதல், பிரபல ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி இருவரையும் கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக காரில் உடனிருந்த வழக்கறிஞர் தங்கராஜ் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் போது, பின் தொடர்ந்து வந்த கொலை கும்பலிடம் இருந்து தப்பி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைய, ஜெமினி பாலத்தில் இருந்து எதிர் திசையில் புகுந்து சென்றதாகவும், பின் தொடர்ந்து வந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கியதோடு ஜி.என்.செட்டி சாலையில் விரட்டி வந்து துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
எதிர் கோஷ்டி ரவுடிகளான சம்போ செந்தில், பாண்டிச்சேரி பிரசன்னா மற்றும் நெப்போலியன் ஆகியோர் தான் இந்த தாக்குதலுக்கு காரணமென தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.