கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதலாக தண்ணீரை திறப்பது குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை புறப்பட்டு சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை அமைச்சர்கள் இருவரும், விஜயவாடாவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர முதல்வருடனான பேச்சுவார்த்தையின்போது கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை திறக்க வலியுறுத்தப்படும் என்றார்.
இதேபோல், கிருஷ்ணா, கோதாவரி, காவேரி நதிகள் இணைப்பு குறித்தும் அவருடன் பேச்சு நடத்த வாய்ப்பிருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.