ஒவ்வொரு நாளும் உணவில் அயோடின் உப்பை சரிவர பயன்படுத்தா விட்டால், கழுத்துக் கழலை மற்றும் அறிவுத்திறன் குறைபாடு உள்ளிட்டவைகளை தவிர்க்க முடியாது என ஆய்வக அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் அயோடின் உப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வக திட்ட அலுவலர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி முகாம், சென்னை - தேனாம்பேட்டை - டி.எம். எஸ் வளாகத்தில் துவங்கியது. உணவின் மூலமாக போதுமான அளவு அயோடின் சத்து கிடைக்கிறதா என குமரி, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 200 பள்ளி சிறார்களிடம் எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை முடிவு, இப்பயிற்சி முகாமில் வெளியிடப்பட்டு, விவாதிக்கப் பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.