சென்னையில் ஜெயின் மெட்டல் நிறுவனத்தில் 5 நாட்களாக நீடித்த வருமான வரி சோதனையில், கணக்கில் வராத 1 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 400 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத வருமானத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.
பல்வேறு தொழில்களை நடத்தி வரும் அந்நிறுவனத்தில் வரிஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்த நிலையில், கடந்த 25ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்கள் நீடித்த சோதனையின் முடிவில், 400 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், பென்டிரைவ், சொத்து பத்திரங்கள், தேதி குறிப்பிடாத காசோலைகள் உட்பட பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் காட்டாத பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ரகசிய கணினி சர்வர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டு