சென்னையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை விடும் லாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சோழிங்கநல்லூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீரை எடுத்து செல்லும் லாரிகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கழிவுநீரை நீர்நிலைகளில் விடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், புகார் குறித்து விசாரிக்க நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.