திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
97 வயதாகும் அன்பழகன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலையை விசாரித்தார்.
இன்னும் ஒரிரு நாட்கள் அவர் மருத்துவமனையிலே இருந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.