சென்னை பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரையிலான சாலையை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணை வந்தன. அப்போது, லூப் ரோட்டில் உள்ள மீன் கடைகள் அனைத்தும் ராணி மேரி கல்லூரி அருகே இடமாற்றப்படும் என மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால் தெரிவித்தார். இதையடுத்து, கடை மாற்றம் தொடர்பாக மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அடையார் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பட்டினப்பாக்கத்திலிருந்து பெசன்ட் நகர் வரையிலான சேதமடைந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கை மார்ச் 18 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.