ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் 50 சதவீதம் சொந்த லாரிகளை இயக்க ஆவின் பால் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் பால் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தி கடந்த 14ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிடுத்து மீண்டும் பணிக்கு செல்ல விரும்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் ஆவின் நிர்வாகத்திற்கு நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, நிறுவனத்திற்கு தேவைப்படும் டேங்கர் லாரிகளில் 50 விழுக்காட்டை ஆவின் நிர்வாகமே சொந்தமாக இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..