சென்னை பாண்டிபஜார் ஸ்மார்ட் சாலையில் உள்ள பழமையான மரம் ஒன்று ரேமண்ட்ஸ் துணிக்கடைக்கு இடையூறாக இருந்ததால் இரவோடு இரவாக வெட்டி அகற்றியதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாகப்பட்ட பாண்டிபஜார் பிரதான சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில், அப்பகுதியில் சாலையோரம் உள்ள பழமையான மரம் இரவோடு இரவாக வெட்டி அகற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ரேமண்ட்ஸ் துணிக்கடைக்கு எதிரே உள்ள மரம் இடையூறாக இருப்பதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதனை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதாக கூறப்படுகிறது.