சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர கோரிய வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு பனிக்காலங்களில் தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் "சுவதார் க்ரே" திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் தங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவும் சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 11க்கு ஒத்திவைத்தனர்.