தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோவிலைச்சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பங்கேற்கும் தசாஹோமம் நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் அடையாளச்சின்னமாக விளங்கும் மாமன்னன் ராஜசோழனால் கட்டப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில், அஸ்த்திர மகாயாகம், வருண சாந்தி எந்திர யாகம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை 10 திசைகளில் தேவதைகளை சாந்தப்படுத்தும் தசாஹோமம் தொடங்கியது.
4 நுழைவு வாயில் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி ஹோமம் நடத்திவருகிறார்கள்.
இதற்கிடையே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.