தஞ்சாவூரில் முதல் முறையாக இந்திய போர் விமானங்கள் நிறுத்தப்பட உள்ளதாக விமானப்படை தளபதி பகதாரியா கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகோய் -30 ரக போர் விமானங்களை கொண்ட ஒரு படை அணி, தஞ்சாவூர் படைத்தளத்தில் நிறுத்தப்படும் என்றார்.
முதல் முறையாக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையால் தென்பிராந்தியத்தில் விமான படையின் வலிமை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தென்பிராந்திய விமானப்படையின் ஒரு அங்கமாக தஞ்சாவூர் விமானப்படை அணி இருக்கும் என்று அவர் கூறினார். மாணவர்களுக்க தேசிய மாணவர் படை மூலம் பயிற்சி அளிப்பதால், ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையிலோன தொடர்பு அதிகரிக்கும் என்றும் பகதாரியா தெரிவித்தார்.